ETV Bharat / state

கர்நாடகாவில் பெய்த அதீத மழை - ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்! - காவிரி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

Hogenakkal water inflow: கர்நாடகாவில் பெய்த அதீத மழை காரணமாக தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ஒகேனக்கல்  அருவிகளில் ஆர்பரித்து கொட்டும் நீரின் காட்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 2:59 PM IST

Updated : Sep 22, 2023, 3:28 PM IST

கர்நாடகாவில் பெய்த அதீத மழை காரணமாக தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது

தருமபுரி: ஒகேனக்கல்லில் ஒரே நாளில் 70 மில்லி மீட்டர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்த்திறப்பு அதிகரிப்பால், 3 நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 6000 கன அடியாக அதிகரித்து உள்ளன. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 4,700 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று (செப் - 21) இரவு, ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளன. ஒகேனக்கல்லில் பெய்த கனமழை, கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து காரணமாக இன்று நீர்வரத்து 6,000 கன அடியாக உயர்ந்துள்ளன.

கடந்த, மூன்று நாட்களாக நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தண்ணீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகின்றன. மேலும், காவிரி ஆணையம் கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு நீர் திறப்பு வினாடிக்கு 5000 கன அடி அதிகரிக்கப்பட்டால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வாக ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கர்நாடாக, தமிழ்நாட்டிற்கு இந்த மாதம் 37.9 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. பிலிகுண்டுலுவிலிருந்து 15 நாட்கள் தமிழகத்திற்கு 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி கர்நாடக அரசின் மேல்முறையீட்டை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தண்ணீர் தர மாட்டேன் என்று அடம்பிடித்த கர்நாடக அரசிடம் இருந்து, தானாகவே தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒகேனக்கலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி; இளைஞர் மரணம்; இளம்பெண்ணுக்கு சிகிச்சை!

Last Updated : Sep 22, 2023, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.