தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏரியூர் அருகே நாகமரை காவிரி கரையோர பகுதியில் காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, கள்ளச்சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
![தர்மபுரியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01:04:54:1623224094_tn-dpi-01-pennagaram-kala-sarayam-vis-tn10041_09062021124628_0906f_1623222988_200.jpg)
அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட 600 லிட்டர் அளவுள்ள ஊறலை காவல் துறையினர் அழித்தனர். தொடர்ந்து, கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.