கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். பொக்லைன் இயந்திர ஓட்டுநரான இவருக்கு நதியா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று நதியாவின் கழுத்தை சக்திவேல் கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஊத்தங்கரை காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சை பெற்று வந்த சக்திவேல், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு தெரியாமல், மருத்துவமனையின் 5ஆவது மாடி கட்டடத்திலிருந்து கீழே குதித்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.