ETV Bharat / state

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை! - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 39 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
author img

By

Published : Aug 7, 2020, 2:07 PM IST

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து காவிரியில் கர்நாடக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (ஆக. 6) காலை 11 மணியளவில் கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. மேலும், 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 11 ஆயிரம் கன அடி உயர்ந்து, 39 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவிக்குச் செல்லும் நடை பாதை பகுதியில், தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒகேனக்கல் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...கரோனாவுக்கு குட்பை: வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.