கர்நாடக அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 900 கன அடியாக நீடித்துவருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பகுதி என ஆங்காங்கே நீர் தேக்கமடைந்து பாறைகளாகக் காட்சியளிக்கின்றன. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் ஐந்தருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் காரணமாக தொடர்ந்து 170ஆவது நாளாக ஐந்தருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: