கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு இம்மாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாயிரம் கனஅடி நீரை காவிரி ஆற்றில் திறந்துவிட்டது.
கபினி அணையில் இருந்து ஆயிரத்து 500 கனஅடி நீரும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,083 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது.
நேற்று (ஜூன் 12) ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு காலையில் இரண்டு ஆயிரத்து 300 கன அடியாகவும் மாலையில் இரண்டு ஆயிரத்து 700 கன அடியாகவும் உயர்ந்தது.
காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட காவிரி நீர், சமீபத்தில் பெய்த மழைநீர் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்து உயர்ந்து மூன்று ஆயிரத்து 500 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது.