ETV Bharat / state

'ஒகேனக்கல் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' - கே.என்.நேரு - முதல்வரின் ஆணைக்கிணங்க

ஒகேனக்கல் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தர்மபுரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு
author img

By

Published : Jul 9, 2021, 9:07 PM IST

Updated : Jul 9, 2021, 9:28 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், குடிநீர் விரிவாக்கப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.9) தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு

திமுகவின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு புளூரைடு தன்மையில்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கொண்டுவரப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இந்த திட்டம் 2006-11 திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜப்பான் நாட்டு நிதி உதவி பெறப்பட்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் முடிந்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திட்டம் பயன்பாட்டுக்கு வந்தபோதும் அனைத்து மக்களுக்கும் இத்திட்ட குடிநீர் சென்று சேரவில்லை எனவும், ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரையும் கலந்து விநியோகிப்பதால் புளூரைடு பாதிப்பு தொடர்வதாகவும் குறைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவற்றை கண்டறிந்து நீக்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில், விநியோகிக்கப்படும் குடிநீரில் 1.5 மில்லி கிராம் அளவில் மட்டுமே புளூரைடு கலந்து இருப்பதாக கூறப்பட்டது.

மனிதர்களுக்கான தண்ணீர் தேவை

'ஒகேனக்கல் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' - கே.என்.நேரு

மேலும், மக்கள் தொகை பெருக்கம், மனிதர்களுக்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஒகேனக்கல் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீரை ஒகேனக்கல் குடிநீருடன் கலந்து விநியோகம் செய்து வந்துள்ளனர். குடிநீர் தொட்டி அமைக்காதது, மின் இணைப்பு வசதி இல்லாமை, அதிக உயரமான இடத்தில் குடியிருப்புகள் இருப்பது போன்ற காரணங்களால் சில பகுதிகளுக்கு இதுவரை ஒகேனக்கல் குடிநீர் இன்னும் சென்று சேராமல் உள்ளது.

ஓரிரு வாரங்களுக்குள் இந்த பிரச்னைகளை எல்லாம் சரி செய்து முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் குடிநீர் தொட்டிகள் தேவையுள்ள இடங்களுக்கு, முதலமைச்சர் அனுமதி பெற்று தொட்டிகள் அமைக்கப்படும்.

நீரை குடிக்கவும், சமைக்கவும்

தினமும் 120 எம்எல்டி வரை ஒகேனக்கல் நீர் அனுப்பப்படும்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. இது நிரந்தரமாக சரிசெய்யப்படும்வரை பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஒகேனக்கல் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டும் பயன்படுத்தவும், இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது" என கூறினார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க
முதல்வரின் ஆணைக்கிணங்க
இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஒய். பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

Last Updated : Jul 9, 2021, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.