தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல்லில் பேரிடர் மேலாண்மை மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கிவைத்தார்.
இதில், அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பரிசல் ஓட்டிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை எவ்வாறு மீட்பது, தண்ணீரில் அடித்துச் சென்ற நபரை மீட்டு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும், பரிசல் சூழலில் சிக்கிக் கொள்ளும்போது என்ன செய்வது உள்ளிட்ட செய்முறைகளை ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் செய்துகாட்டினர்.
இந்நிகழ்ச்சியில், தண்ணீரில் ஒரு நபர் அடித்துச் செல்லும்பொழுது அந்நபரை மிதவை மூலம் தீயணைப்பு வீரர் மீட்டு கரைக்குக் கொண்டுவரும் நிகழ்வை தத்ரூபமாக செய்துகாட்டினர். பேரிடர் மீட்பு நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள், பரிசல் ஓட்டிகள், வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்க - பேருந்துகள் இயக்க தடை!