கர்நாடக மாநிலம் மாண்டியா தும்கூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகப் பகுதியிலிருந்து மழைநீர் பிலிகுண்டுலு பகுதிக்கு நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து, இன்று காலை எட்டு மணி நிலவரப்படி 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
தற்போது ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய மழைநீர் செம்மண் கலந்து தண்ணீர் செந்நிறமாக வழிந்தோடிவருகிறது. ஒகேனக்கல்லில் 50ஆவது நாளாக குளிக்கவும் 21ஆவது நாளாக பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: தடையை மீறி ஒகேனக்கலில் படகில் சென்ற குடும்பத்தினர் : பரிசல் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு!