ETV Bharat / state

தருமபுரி நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு - High Court

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தருமபுரி நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

author img

By

Published : Dec 18, 2022, 8:16 PM IST

தருமபுரி: தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்களில் தருமபுரி மாவட்ட பொறுப்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் G.R.சுவாமிநாதன் M. நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின் போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அந்தந்த வழக்குகளின் விசாரணை குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். மேலும் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதேபோன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க வேண்டிய வழக்குகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தியிடம் கேட்டறிந்தனர்.

குற்றவியல் வழக்குகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவரித்தனர். மாவட்டத்தில் உள்ள வட்ட நீதிமன்றங்களிலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: "வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.