ETV Bharat / state

வானிலை மையத்தை குறை சொல்வது பொறுப்பற்ற செயல் - ஜி.கே.வாசன் கருத்து!

GK Vasan: தருமபுரியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டலக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவர் ஜி.கே.வாசன், நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கி இருப்பது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 7:22 PM IST

வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத எதிர்கட்சிகள்.. வெளுத்து வாங்கிய ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

தருமபுரி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டலக் கூட்டம் இன்று (டிச.23) தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது, "சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் பெய்த கடுமையான மழையின் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உதவ பணியாற்ற வேண்டும்.

மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாநிலங்களவையில் இருமுறை குரல் கொடுத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கியிருப்பது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், மழை வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து குரல் கொடுப்பதற்காகத்தான் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மாறாக நாடாளுமன்றத்தை முடக்கி வெளியிலே சென்று, நாடாளுமன்றத்தின் மேலவை தலைவருக்கு அவமரியாதை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. மக்கள் மன்றத்தில் 150 வருடங்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் மசோதாக்களை புதியதாக கொண்டு வரும்போது, அந்த மசோதாக்களைப் பற்றி விவாதிக்கக்கூடிய பொறுப்பு மற்றும் கடமை எதிர்கட்சிகளுக்கு உண்டு.

அதை அவர்கள் செய்யத் தவறி தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்ற நோக்கத்தில், மசோதா கூட்டங்களில் கூட கலந்து கொள்ளாமல் நாடாளுமன்றத்தை முடக்கியது வேதனைக்குரியது. ஒவ்வொரு மசோதாக்களும் முக்கியமானது. வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை எதிர்கட்சிகள் நிறைவேற்றவில்லை.

தென் மாவட்டத்தில் மழை வெள்ளம் மக்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முறையாக செய்திருந்தால், நிச்சயமாக ஓரளவிற்கு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பு குறைத்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாறாக தமிழ்நாடு அரசு வானிலை மையம் சரியாக தகவல் அளிக்கவில்லை என்று சொல்வது, பொறுப்பற்ற செயலாகவே நான் கருதுகிறேன்.

புயல், மழை, வெள்ளம் சார்ந்த பணிகள் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், எந்த மாநிலத்தில் எந்த பிரச்னை நடைபெறுகிறதோ, அந்த பிரச்னைக்கு ஏற்றவாறு மக்களை காப்பாற்றுவதில் உயர்ந்த நிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை படிப்படியாக நிச்சயம் கொடுப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.