தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ளார்.இவர் எம்.ஆர். ராதா நாடக நடிகர் சங்கம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது நண்பர் ஆண்டவர் தவில் இசைக் கலைஞர்.
இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து கோடைகாலத்தில் ஏழை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கு மாணவர்களுக்கு இலவசமாக பம்பை, நடனம், பறை, தாரை தப்பட்டை, நடிப்பு உள்ளிட்ட பல அழிந்துவரும் கலைகளைக் கற்றுக்கொடுக்கின்றனர்.
இது குறித்து சிங்காரவேலு பேசுகையில், ‘எனக்கு தெரிந்த கலையை இந்த மாணவர்களுக்கு கற்றுத் தருவதில், அடுத்த தலைமுறைக்கு காற்றுக் கொடுப்பதில் ஆர்வம் இருந்தது. அதனால் நானும் என் நண்பரும் ஒன்றிணைந்து அழிந்துவரும் கலைகளைக் காப்பாற்ற அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கிறோம்’ என்றார் பெருமிதத்துடன்.
’