தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் மலர் சந்தையில் இன்று விவசாயிகள் குறைந்த அளவு பூவை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாமந்திப்பூ சாகுபடி செய்த விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பூச்செடிகள் அழுகின.
இதன் காரணமாக பூ வரத்து குறைந்தது. அதனால் பூவின் விலை அதிகரித்தது. பூவின் விலை...
- சாமந்தி கிலோ 100 ரூபாய்,
- சம்பங்கி கிலோ 80 ரூபாய்,
- கனகாம்பரம் கிலோ 400 ரூபாய்,
- குண்டுமல்லி கிலோ 300 ரூபாய்,
- சன்ன மல்லி 400 ரூபாய்,
- அரலி கிலோ 120 ரூபாய்,
- ரோஜா கிலோ 80 ரூபாய்,
- 20 ரோஜா பூ கொண்ட ஒரு கட்டு 60 ரூபாய்.
மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்டவை பனிப்பொழிவு காரணமாக குறைந்த அளவே பூப்பதால் வரத்து குறைந்து விலை உயர்ந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தோவாளை மலர் சந்தையில் பூ விலை கடும் உயர்வு