தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகம் உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், மாவட்டத்தில் உள்ள நூறு சத்துணவு அமைப்பாளர்களுக்குப் பாதுகாப்பாக உணவு சமைப்பது மற்றும் பொருட்கள் கொள்முதல் குறித்த பயிற்சி தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா மற்றும் உணவு பாதுகாப்புத்துறை வல்லுநர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாதுகாப்பாக உணவு சமைப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
மேலும் உணவு சமைக்கும் அறை சுத்தம், உணவுப் பொருட்களை கொள்முதல் செய்யும் பொழுது தரமான பொருட்கள் எவ்வாறு கொள்முதல் செய்வது, உணவு சமைக்கும் பொழுது நிறமூட்டிகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து சத்துணவு அமைப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
மாநிலத்தில் முதன்முறையாக இப்பயிற்சி தருமபுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாதுகாப்பாக சமைப்பது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.
இதையும் படிங்க: 150 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் நூலகத்தில் ஒப்படைப்பு