ETV Bharat / state

மழையால் பட்டாசு விற்பனை மந்தம் - கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குறைவு

தருமபுரி: மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருவதால் மக்கள் பட்டாசுகள் வாங்குவதில் ஆர்வமின்றி உள்ளனர்.

Fireworks sales slump in Dharmapuri due to rains

author img

By

Published : Nov 13, 2020, 5:52 PM IST

தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் பண்டிகை காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நகரப் பகுதியில் தொடர் மழை காரணமாக பட்டாசு விற்பனை செய்யும் கடைகளிலும் பட்டாசு வாங்குவதற்கு ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தீபாவளி பண்டிகை காலங்களில் வழக்கமாக பண்டிகையின் முதல் நாள் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு கரோனா காரணமாகவும், மழை காரணமாகவும் மக்கள் கூட்டமின்றி சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்மழையால் தருமபுரி கடைவீதி, ஆறுமுக ஆசாரி, தெரு சித்தவீரப்ப செட்டி தெரு பகுதிகளில் பண்டிகை காலங்களில் முதல் முறையாக மக்கள் நடமாட்டம் குறைந்த அளவு காணப்பட்டது.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகையில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.