தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த ஈச்சம்பள்ளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்துவருகிறார். கட்டடத் தொழிலாளியான இவர் கட்டடப் பணிக்காக பெங்களூருக்குச் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக பொன்னுச்சாமியின் கூரை வீட்டில் தீப்பற்றியுள்ளது. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்கோடு பகுதியிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தீ விபத்தில் மூன்று பவுன் தங்க நகைகள், இரண்டு லட்சம் பணம், வீட்டிலிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட நான்கு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்துக் குறித்து மாரண்டஹள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இகையும் படிங்க: பசுக்களுக்கு வளைகாப்பு... ஆந்திராவில் விசித்திர கலாசாரம்!