ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கியும் வெறிச்சோடி இருக்கும் ஒகேனக்கல்

தருமபுரி: ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கியும் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

few people gathered in hogenakkal falls
few people gathered in hogenakkal falls
author img

By

Published : Oct 23, 2020, 3:31 PM IST

தருமபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒகேனக்கல். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

few people gathered in hogenakkal falls
வெறிச்சோடி உள்ள கடைகள்

பின்னர், தளர்வுகளின் அடிப்படையில், நேற்று மாலை முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மசாஜ் செய்துகொள்ளவும் விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்டம் நிர்வாகம் நீக்கியது.

இத்தகைய தளர்வுகள் வழங்கியும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுவதால், பரிசல் இயக்கம் தொடங்கப்படாமல் உள்ளது. நாளை முதல் மூன்று தினங்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

few people gathered in hogenakkal falls
காய்ச்சல் சோதனை செய்யும் சுற்றுலாப் பயணிகள்

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.