தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துவேல் - தேன்மொழி தம்பதியினர்.
இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவம் முடிந்து தேன்மொழி முத்துகவுண்டன்கொட்டாய் கிராமத்திலுள்ள அவரது தாய் வீட்டில் குழந்தையுடன் இருந்துள்ளார்.
குழந்தையின் பாட்டி கைது
இந்நிலையில் தேன்மொழி தம்பதியின் மூன்றாவது பெண் குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறி மேட்டுப்பட்டி கிராமத்துக்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த கிராம செவிலியர் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் காவல்துறையினர் குழந்தையின் தாய் தேன்மொழி, தேன்மொழியின் தாய் உமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உமா குழந்தைக்கு எருக்கம் பால் ஊற்றி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் உமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தியும் பலி... அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா ப்ளஸ் கரோனா!