தர்மபுரி: பிடமனேரி மாந்தோப்பு கோவிந்ததாஸ் நகரில் வசித்து வருபவர் சிவகுமார். இவரது மனைவி தேவி கருமாரி தர்மபுரி ரயில்வே காவல் நிலையத்தில் 20 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது தர்மபுரி நகரக் காவல் துறையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பாதுகாக்கும் தனிப்பிரிவில் பணிபுரிந்துவருகிறார்.
தூக்கிட்டு தற்கொலை:
தேவி கருமாரி சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூன் 24) இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துத் தகவலறிந்த தர்மபுரி நகர காவல் துறையினர், தேவி கருமாரியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்றே கடைசி நாள் - 'நீங்க வாங்கியாச்சா'