ETV Bharat / state

சரிந்தது விலை: நிலத்திலேயே அழுகிய தக்காளிகள் - வேதனையில் விவசாயிகள் - Tomato price

தர்மபுரி: பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை குறைவால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பறிக்காமல் விவசாய நிலத்தில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தக்காளி பறிக்காமல் நிலத்தில் அழுகும் பரிதாப நிலை

author img

By

Published : Jun 21, 2021, 4:50 PM IST

தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வழக்கமாக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்துவருகின்றனர்.

இந்தத் தக்காளிகளை பாலக்கோடு பகுதியில் அமைந்த பிரத்யேக தக்காளி சந்தையில் விற்பனை செய்துவந்தனர். இச்சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதியாகிறது.

கடந்த 4 மாதமாக தக்காளி கொள்முதல் விலை கிலோ 10 ரூபாய்க்கு குறைந்து விற்பனையாவதால் தக்காளி சாகுபடிசெய்த விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பறிக்காமல் விலை நிலத்திலேயே விட்டுள்ளனர்.

பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கூடை விற்பனைக்கு 10 ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். தக்காளி விற்பனை செய்யவரும் விவசாயிகள் சுங்கக்கட்டணம் கட்டி விற்பனை செய்யமுடியாத வறுமை நிலையில் உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுங்க கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டு தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.