ETV Bharat / state

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கொள்முதல் - கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்! - Palakkad Tomato Market

தருமபுரி: பாலக்கோடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கேட்ட இடைத் தரகர்களை எதிர்த்து, ஒரு டன் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்
கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Nov 8, 2020, 1:22 PM IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தக்காளிச்சந்தை செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, புலிகரை, பேகாரஅள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள், பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் இங்கிருந்து தக்காளிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக அதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 3 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று(நவ.8) ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

தரையில் தக்காளி
தரையில் தக்காளி

இந்நிலையில் சந்தையில் இடைத்தரகர்கள் பிரச்னையால் தக்காளி விலை கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகக்கூறி, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த ஒரு டன் அளவிலான தக்காளிகளை சந்தையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய விவசாயிகள்; 'தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய அளவு விலை நிர்ணயம் செய்யப்படாததால், சில நேரங்களில் விலை உயர்ந்தும் பல நேரங்களில் விலை குறைந்தும் விற்பனையாகிறது. விலைக் குறைவு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. பாலக்கோடு தக்காளிச் சந்தையில் 20 கிலோ தக்காளிக்கூடைக்கு நுழைவுக் கட்டணமாக 5 ரூபாயும், இடைத்தரகர்கள் கமிஷன் தொகையாக ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்

மகசூல் செய்த பகுதிகளில் இருந்து 20 கிலோ தக்காளியை சந்தைக்குக் கொண்டுவர கூடைக்கு 20 ரூபாய் வாகனப் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. தக்காளியை விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டு வர 40 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை ஆவதால் செலவான தொகையில் பாதி அளவு கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், தக்காளிக் கூடை 120 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்தால், அதில் இடைத்தரகர்கள் தரம் இல்லை எனக்கூறி 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். விலைக் குறைவால் பலர் தக்காளி மகசூல் செய்யாமல் தங்கள் விளைநிலங்களிலேயே பறிக்காமல் விட்டுள்ளனர்.

தக்காளியை சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுமதி செய்தால் உரிய விலை கிடைக்கும்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோயில் ஆவணங்கள் எரிப்பு - ஊழியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.