தருமபுரியில் தமிழக நதிகளை போர்க்கால அடிப்படையில் இணைத்திட வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தருமபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணையில் இருந்து நடைப்பயணமாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, 'தென்பெண்ணை ஆற்றின் எண்ணேகொல்புதூர் அணைகட்டில் இருந்து, வலது இடதுபுற புதிய வாய்கால் அமைக்கும் திட்டம் 276 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இதற்கான காவேரி மேலாண்மை வாரியக் கூட்டம் ஒரு வருடமாக கூட்டப்படவில்லை. இது தலைவர் இல்லாத ஆணையமாக செயல்படுகிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், 46 ஏரிகள் பயன்பெறும். ஆகவே இத்திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரும்பு ஆலையிலிருந்து விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தருக!'