தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு பகுதியில், சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் உயரம் 65 அடியாகும். பெரும்பாலும் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் பெய்யும் மழை தண்ணீரே இந்த அணைக்கு வந்து சேரும்.
இந்த அணையிலிருந்து இடது, வலது கால்வாய்களின் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபும் ஓந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி உள்ளிட்ட 9 ஆயிரத்து 550 ஏக்கர் விவசாயிகள் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு வாணியாறு அணையில் 80 விழுக்காடு தண்ணீர் நிரம்பியதால் அந்த தண்ணீர் முழுவதும் விவசாய பாசனத்திற்கு திறக்கப்பட்டது. கோடை மாதம் தொடங்கி தற்போதுவரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆனாலும் இந்த வாணியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை.
மேலும் ஏற்காடு மலையில், கோடை மழை பொழியவில்லை. ஆனால் கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஏற்காடு மலை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஏற்காடு மலையில் இருந்து வாணியாறுக்கு தண்ணீர் வரும் பாதையில் விவசாயிகள் ஆங்காங்கே தடுப்புகள் கட்டியிருப்பதால் தண்ணீர் வர வழியில்லை என்பதால் நீா்வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் அணைக்கு வர வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தபால்காரர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை