ETV Bharat / state

எட்டு மாத கர்ப்பிணி தற்கொலை; கணவரை கைது செய்யக்கோரி போராட்டம்! - Dharmapuri Government Hospital

தருமபுரி: எட்டு மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான கணவனை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டு மாத கர்ப்பிணி தற்கொலை....  உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
author img

By

Published : Jul 16, 2019, 10:11 PM IST

தருமபுரி மாவட்டம், கல்லாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் பாஞ்சாலி என்பவருக்கும் இடையே கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சதீஸ்குமார் எந்த வேலைக்கும் போகாமால் மது அருந்திவிட்டு பாஞ்சாலியை அவரது அம்மாவீட்டிற்கு சென்று பணம் எடுத்துவரச் சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், எட்டு மாத கர்ப்பிணியான பாஞ்சாலி நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்ய முயற்சித்துளார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் பாஞ்சாலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Dharmpuri
சத்திஸ்குமார் - பாஞ்சாலி

இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது இறப்புக்கு காரணமான சதீஸ்குமாரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஞ்சாலியின் உடலை வாங்கவும் மறுத்தனர். இவர்களிடம் காவல்துறையினர், வட்டாட்சியர் ஆகியோர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Intro:tn_dpi_01_suside_salimariyal_img_7204444Body:tn_dpi_01_suside_salimariyal_img_7204444Conclusion:8 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான கணவனை கைது செய்யக்கோரி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூõரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார், அதே பகுதியை சேர்ந்த பாஞ்சாலை என்கிற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. சதீஸ்குமார் கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவி பாஞ்சாலியின் அம்மாவீட்டிற்கு சென்று பணம் எடுத்துவர சொல்லி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான பாஞ்சாலி நேற்று அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயற்சி செய்தவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லுõரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் 8 மாத கர்ப்பிணியான பாஞ்சாலி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் பாஞ்சாலி இறப்புக்கு காரணமான கணவன் சதீஸ்குமாரை கைது செய்யக்கோரி தருமபுரி அரசு மருத்துவக்கல்லுõரி முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கணவர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.