ETV Bharat / state

கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தருமபுரி: பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோட்டூர் மலைப்பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேவையான உபகரணங்களை காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் பாதுகாப்புடன் கழுதைகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

dharmapuri
author img

By

Published : Apr 17, 2019, 7:50 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடத்த தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று கொண்டுசெல்லப்பட்டன.

அந்த வகையில் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு போன்ற மலைக் கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால், வாக்குப்பதிவு இயந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

கோட்டூர் மலையிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு மலை அடிவாரத்திலிருந்து கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர். கோட்டூர் மலை சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதைகள் செங்குத்தாக உள்ள காரணத்தினாலும், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடி வருவதாலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை தீவிர பாதுகாப்புடனும், வனத் துறையினரின் உதவியுடனும் காவல் துறையினர் கொண்டுசென்றனர்.

கிராமத்தில் ஆண் வாக்காளர்கள் 351, பெண் வாக்காளர்கள் 321 என 672 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி இல்லாததால், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வாக்குப்பதிவு செய்ய வைத்துள்ளனர்.

இப்பகுதிக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் கழுதை உரிமையாளர் சின்ராஜ்க்கு ரூ.5 ஆயிரம் வாடகையை தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

இந்தக் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் சின்ராஜ் என்பவர் கடந்த 45 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்துவருகிறார். இவர் மேலும் கிராம மக்களுக்கு நியாய விலைக்கடை அரிசி உள்ளிட்ட பொருட்களையும் கொண்டு செல்லும் பணியை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Intro:TN_DPI_01_17_EVM SENDING DONKEY_VIS _7204444

Body:TN_DPI_01_17_EVM SENDING DONKEY_VIS _7204444

Conclusion:தருமபுரி மாவட்டம் மலை கிராமங்களில் உள்ள வாக்குசாவடிகளுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி  வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எரிமலை. கோட்டூர் மலை .அலகட்டு.போன்ற மலை கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லை இதன் காரணமாக வாக்குப்பதிவு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்வது  வழக்கம் .ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது .இந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுக்கு  உட்பட்ட  வாக்குச்சாவடிக்கு தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தனர். கோட்டூர் மலையிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு  மலை அடிவாரத்திலிருந்து கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை  கொண்டு சென்றனர்.கோட்டூர் மலை சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்த மலைப் பாதைகள் செங்குத்தாக உள்ள காரணத்தினாலும் வன விலங்குகளான யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இப் பகுதியில் நடமாடி வருகின்றன.வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்  தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் வனத்துறை அலுவலர்கள் துணையூடன் வாக்குப்பதிவு மையத்திற்கு  கொண்டு சென்றனர். கோட்டூர் மலை கிராமத்தில் ஆண் வாக்காளர்கள் 351 பெண் வாக்காளர்கள் 321  என672 வாக்காளர்கள் உள்ளனர். நாகரீகம் வளர்ந்த காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு சாலை வசதிகள் இன்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மலை கிராமங்கள் மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர் அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.கோட்டூர் மலை கிராமத்திற்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் கழுதை உரிமையாளர் சின்ராஜ் க்கு  ரூபாய் 5 ஆயிரம் வாடகை தேர்தல் ஆணையம் வழங்குகிறது.இந்த கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்லும் சின்ராஜ் என்பவர் கடந்த 45 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார்.இவர் மேலும் கிராம மக்களுக்கு நியாய விலை கடை அரிசி உள்ளிட்ட பொருட்களையும் இந்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் மாவட்டத்திற்குட்பட்ட ஏமனூர் பகுதியில் பரிசல் மூலம் வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்றனர். அரசுகளின் நடவடிக்கையால் அப்பகுதிகளுக்கு சாலை அமைக்கப் பட்டதால் இந்த முறை சாலை மார்க்கம் ஆகவே அந்த பகுதிக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.