தருமபுரி நகர காவல் நிலையத்தில், காவல் அலுவலர்கள், காவலர்கள் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த சமத்துவப் பொங்கல் விழாவானது காவல் ஆய்வாளர் ரத்னகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு காவல் நிலையம், காரிமங்கலம் காவல் நிலைய காவலர்களும் சமத்துவப் பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்துக் கொண்டாடினர். மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் காவலர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இவ்விழாவின் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.