தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்காக பயிற்சி வகுப்பு தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் இன்று தொடங்கியது. இதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாளுவது, வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் எந்த மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் (VVPAT) எவ்வாறு கையாளுவது என்பன குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
8,000 தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமில், தேர்தல் பொது பார்வையாளர் தேபேந்திர குமார் ஜனா, தருமபுரி சார் ஆட்சியர் சிவனருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டது தலைமை தாங்கினர்.