தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி வீட்டில் இன்று(ஜன.20) லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அத்துடன் அவருடைய சகோதரர் வீடு, வணிக கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை