ETV Bharat / state

அன்பழகன் வீட்டில் சோதனை: திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மகன், அவருடைய மகள், அன்பழகனின் சித்தப்பா வீடு உள்ளிட்ட 42 இடங்களில் தருமபுரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை

author img

By

Published : Jan 20, 2022, 12:36 PM IST

தருமபுரி: அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சராக கே.பி. அன்பழகன் பதவி வகித்தார். அவர் தற்போது பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் கே.பி. அன்பழகன் வீடு, அவருக்குத் தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கே.பி. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்பழகன் வீட்டில் சோதனை: குவிந்த அதிமுகவினர்... திமுக அரசுக்கு எதிராக கோஷம்

கே.பி. அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு புகார்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளியில் கே.பி. அன்பழகன் வீடு, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களிலும், தருமபுரி அதிமுக நகரச் செயலாளர் அன்னசாகரம் பகுதியிலுள்ள பூக்கடை ரவி வீடு, இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி வீடு, கோவிந்தசாமியின் அண்ணன் அன்பழகன் வீடு, கடைகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை
முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் சோதனை

கே.பி. அன்பழகன் மகன் சந்திரமோகன், சசிமோகன் அவருடைய மகள் வித்தியா, கே.பி. அன்பழகன் சித்தப்பா வீடு உள்ளிட்ட 42 இடங்களில் தருமபுரி மாவட்டத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. கே.பி. அன்பழகன் வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்து நின்று திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிவருகின்றனர். இதன் காரணமாக காரிமங்கலத்தில் உள்ள கே.பி. அன்பழகன் வீட்டின் முன்பு பரபரப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை; கணக்கில் வராத ரூ.11.32 கோடி

For All Latest Updates

TAGGED:

dharmapuri
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.