ETV Bharat / state

எத்தனையோ பிரச்னை இருக்கு ... இப்போ இ-சிகரெட் தடை மசோதா தேவையா? - செந்தில்குமார்

தருமபுரி: இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார்.

senthil kumar mp
senthil kumar mp
author img

By

Published : Nov 26, 2019, 10:13 PM IST

Updated : Nov 26, 2019, 10:56 PM IST

இதுகுறித்து அவர், "இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன.

இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வகையான கேன்ஸர் நோய்கள் வருகிறது. இ-சிகரெட் என்பது பேட்டரியால் இயங்கக் கூடியது. ஆனால் இ-சிகரெட் மீது மட்டும் குறிக்கோளை வைப்பது ஏன்? சர்வதேச புற்றுநோய் கழகம் இ-சிகரெட் பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளது.

இ-சிகரெட் காரணமாக நுரையீரல் புற்றுநோய் வருவதாக தெரிவித்துள்ளது. அப்படியென்றால் புகையிலை பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லையா? இந்தியாவில் புகையிலை பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர் . புகையிலை பொருட்களை தடை செய்தால் விவசாயிகளின் வருவாய்க்கு மாற்று வழி ஏற்படுத்தித் தர வேண்டும்.

அனைத்து புகையிலை சார்ந்த பொருட்களையும் தடைசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு குட்கா சார்ந்த புகையிலை பொருட்களை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது சம்பந்தமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

சிபிஐ நடத்திய சோதனை விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி விடுத்த மிரட்டல் - விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சி!

Intro:இ-சிகரெட் தடை மசோதா விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்Body:இ-சிகரெட் தடை மசோதா விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்Conclusion:இ-சிகரெட் தடை மசோதா விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். இ-சிகரெட் குறித்த சட்டத்திருத்தம் கொண்டு வர என்ன அவசரம் இ சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 சதவீதம் மக்கள் மட்டுமே இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்சனைகள் உள்ளது.குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல். குழந்தைகள் பாதுகாப்பு. மருத்துவம். அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல். போன்ற பிரச்சினைகள் உள்ளது. இத்தனை பிரச்சனை இருக்கையில்இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வகையான கேன்ஸர் நோய்கள் வருகிறது.இ-சிகரெட் என்பது பேட்டரியால் இயங்கும் கூடியது. பல நாடுகள் சிகரெட்டை தடை செய்துள்ளது. சிகரெட் புகைப்பதால் பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருகிறதுஆனால் இ சிகரெட் மட்டும் குறிக்கோளை வைப்பது ஏன் . சர்வதேச புற்றுநோய் கழகம் ஈ-சிகரெட் பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளது. இ-சிகரெட் காரணமாக நுரையீரல் புற்றுநோய் வருவதாக தெரிவித்துள்ளது.அப்படி என்றால் புகையிலை பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லையா.இந்தியாவில் புகையிலை பொருட்கள் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர் . புகையிலை பொருட்களை தடை செய்வதால் விவசாயிகள் வருவாய்க்கு மாற்று வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து புகையிலை சார்ந்த பொருட்களை தடைசெய்ய வேண்டும். தமிழக அரசு குட்கா சார்ந்த புகையிலை பொருட்களை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது சம்பந்தமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.சிபிஐ நடத்திய சோதனை விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் பேசினார். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது மொழி மாற்றம் செய்தது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளவும்)
Last Updated : Nov 26, 2019, 10:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.