ETV Bharat / state

'ஸ்டாலினை முதலமைச்சராக்கி செங்கோட்டைக்கு அனுப்புவோம்' -  உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ ! - Ungal Thoguthiyil stalin

தர்மபுரி: ஸ்டாலினை முதலமைச்சராக்கி செங்கோட்டைக்கு அனுப்புவோம் என, ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உளறிக்கொட்டிய சம்பவம் நடந்துள்ளது.

தருமபுரி
தருமபுரி
author img

By

Published : Feb 1, 2021, 9:45 PM IST

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி

அந்த விழாவில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, " பொதுத்தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நியமிக்கின்றாரோ அவரை வெற்றி பெற வைத்து, ஸ்டாலினை செங்கோட்டைக்கு அனுப்புவதே எங்கள் பிரதான கடமை என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சபதம் ஏற்க வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். இரவு பகல் என்று பார்க்காமல் தேனீக்களைப் போல, சங்கு சக்கரங்களை போல சுழன்று சுழன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற மு.க. ஸ்டாலினை, நாட்டின் முதலமைச்சராக்கும் வரை உறங்கக் கூடாது, தூங்கக் கூடாது" என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்கு பதிலாக நாட்டின் முதலமைச்சர் என்றும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்பதற்கு பதிலாக செங்கோட்டை என்று, தடங்கம் சுப்பிரமணி கூறியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவர் தவறாக பேசிக் கொண்டிருந்ததால், மு.க ஸ்டாலின் கை அசைவு மூலம் பேச்சை முடித்துக் கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

வாழை குலையை பறித்து கொண்டு ஓடும் திமுகவினர்

ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு நுழைவு வாயிலில், வாழை குலைகளுடன் வரிசையாக தோரணங்கள் கட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டத்திற்கு வந்த திமுகவினர் வாழை மரங்களில் இருந்து வாழை குலையை பறித்து கொண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.