ETV Bharat / state

தர்மபுரியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

author img

By

Published : Mar 17, 2021, 6:22 PM IST

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் தடங்கம் பெ.சுப்பிரமணி, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தருமபுரி திமிக வேட்பாளர்
தருமபுரியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் பெ.சுப்பிரமணி, சார் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தடங்கம் சுப்பிரமணி பேசுகையில், “25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ஐந்து ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் கன்னிப் பேச்சில், தர்மபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தேன், இதுவரை செயல்படுத்தவில்லை.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 80 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது. பல பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் செல்லவில்லை. திமுக ஆட்சி வந்தவுடன் ஒகேனக்கல் குடிநீர் சென்றடைய பாடுபடுவோம். ஒகேனக்கல் காவிரி ஆற்றிலிருந்து, உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தி, விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்துவோம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்றார்.

இதையும் படிங்க: உலகையை திரும்பி பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.