நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள், தமிழ்நாட்டை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித்த பெருமக்கள், இந்திய திருநாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு், தம் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்கள் ஆகியோரை பெருமைப்படுத்திடும் வகையில், தமிழ்நாட்டில் 64 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (ஏப்.26) மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, வள்ளல் அதியமானின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி உதவி ஆட்சியார் பிரதாப் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.