கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த 41 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் சில தளர்வுகளுடன் கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்தது.
இதையடுத்து, இன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி நகரப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடைகள் நகைக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
இதனால், தருமபுரி பேருந்து நிலையம், அப்துல் மஜீத் தெரு, நான்கு ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்கின்றன.
பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். சிலர், ஊரடங்கு விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களில் மூன்று, நான்கு பேர்களுடன் பயணம் செய்தன.
தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்கப்படும் விதிமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத காரணத்தாலேயே, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்றி அதிகளவில் நடமாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், ட் இடைவெளியைப் பின்பற்றாமல் விற்பனை செய்த மருந்தகம், செல்போன் விற்பனை கடை என மூன்று கடைகளை மூடி சீல் வைத்தார். அதனைத் தொடர்ந்து காலையில் திறந்திருந்த கடைகள் அனைத்தும் மதியம் மூடப்பட்டன.
இதையும் படிங்க : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!