தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இன்று தருமபுரி மாவட்டத்தில் 6 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள பிரபல திருக்கோயில் அர்ச்சகர் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பத்தூர் சென்று வந்துள்ளார்.
கோயில் அர்ச்சகருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் சளி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ச்சகருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் கோயிலுக்கு வந்து சென்றவர்கள் பீதியில் உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து இ பாஸ் பெற்றுக்கொண்டு தருமபுரி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண் உள்ளிட்ட 5 ஐந்து நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தர்மபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பெற்றவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.