தருமபுரி பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தான் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த ஓட்டுநர் திருமால். மணப்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன். நீ வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.
திருமாலின் மிரட்டலுக்கு பயந்து மணப்பெண்ணின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் ஓட்டுநர் திருமாலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது!