தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றியுள்ள பகுதிகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் அப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்கோடு அண்ணாமலை அள்ளி ஆற்று ஓடையில், டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினரின் வருகையை கண்ட டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர், அதிலிருந்த ஒரு யூனிட் மணல் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், டிராக்டரிலிருந்து தப்பியோடிய சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் மகன் சத்திய மூர்த்தி என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.