தர்மபுரி: மாவட்டம் அதியமான் கோட்டையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதா்ஷினி கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், " அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல் தமிழ்நாட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்கின்றன.
அதிகளவு திட்டங்களை செயல்படுத்திய அரசு திமுக
முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டம் முதலில் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத் திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: குஜராத் ஹெராயின் கடத்தல் வழக்கு: சென்னையில் என்ஐஏ அதிரடி ரெய்டு