தருமபுரி: தருமபுரி நாடாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்திடம் தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகா தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிக வளர்ச்சித் திட்டத்தின் (PRASAD) கீழ் தேர்வு செய்து இக்கோயிலின் புகழை உலகறிய செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தருமபுரி எம்.பி. டி.என்.வி. செந்தில் குமார், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ’’தர்மபுரி நாடாளுமன்றத்தொகுதி அரூர் வட்டத்தில் உள்ள தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலானது, எனது நாடாளுமன்றத் தொகுதியின் ஹரூர் தாலுகாவில் உள்ள முக்கியமான புனித இடம்.
ஏழாம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதற்கானச் சான்றுகளாக கல்வெட்டுகள் இன்றும் உள்ளன. அதற்கான அடையாளங்கள் இன்றளவிலும் உள்ளன.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி கைது.. நடந்தது என்ன?
மேலும், இக்கோயிலுக்கு மன்னர் ராஜேந்திர சோழன் தவறாமல் சென்று வந்ததாக கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. அந்த கல்வெட்டு அடையாளங்களும் இப்புனித தலத்தில் அமைந்துள்ளன. கோயிலுக்கு பாதசாரிகள் அதிகரித்து வருவதால், பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
பாரம்பரிய நகரம், உள்ளூர் கலைகள், கைவினைப்பொருட்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சி மிகவும் அவசியமானது, இது வாழ்வாதாரத்தை உருவாக்கும் மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைக்கும் வழிமுறையை வலுப்படுத்தும்.
எனவே, மிகவும் பழமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிக வளர்ச்சித் திட்டத்தின் (PRASAD) கீழ் கொண்டு வந்து இக்கோயிலின் புகழை உலகறிய செய்ய வேண்டும்’’ என்று ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தம்பிதுரையை வைத்து புதிய கணக்கு போடும் ஈபிஎஸ்.. பச்சைக்கொடி காட்டுமா டெல்லி..?