ETV Bharat / state

பிரசவத்துக்கு இலவசம்.. பிரசவித்த பின்னும் இலவசம்.. ஏசி வாகன சேவையை துவக்கி வைத்த எம்.பி.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி எம்.பி. செந்தில் குமார் பிரசவித்த தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப இரண்டு ஏசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

dharmapuri
தருமபுரி
author img

By

Published : Jul 5, 2023, 3:47 PM IST

Updated : Jul 5, 2023, 10:32 PM IST

தருமபுரி எம்பி செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப இரண்டு ஏசி வாகனங்களைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில் குமார் வழங்கினார். வாகனங்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி எம்.பி. செந்தில் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் கூறியதாவது, ''தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பென்னாகரம் மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய் மற்றும் சிசு பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல இரண்டு ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இரண்டு வாகனங்கள் வழங்கக்கோரி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் கேட்டும் வழங்காத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து வாகனங்களை வழங்கி இருக்கிறோம்.

இதையும் படிங்க: ஜி-20 மாநாட்டின் முன் ஏற்பாடுகள் தொடர்பான கூட்டம்: தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை

முக்கியமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் பிறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதன் காரணமாக ஆம்புலன்ஸ்போல் இல்லாமல் சுற்றுலா வாகனம் போல் ஏசி வசதியுடன் 12 நபர்கள் செல்லக் கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பென்னாகரத்துக்கு வழங்கப்பட்ட வாகனம், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளுக்கும்; அரூர் பகுதிக்கு வழங்கப்பட்ட வாகனம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கும் பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏசி பொருத்தப்பட்ட வாகனம் தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படும் தொப்பூர் பகுதியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைத்துள்ளனர். வனப்பகுதியில் 3.5 ஹெக்டேர் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் வேலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் மத்திய அரசிடம் தருமபுரி அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீடு வரும் பொழுது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும், தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 70 சதவீத நிலங்களை கையகப்படுத்திய பின்பு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: BJP functionary Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!

Last Updated : Jul 5, 2023, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.