ETV Bharat / state

'கலவரம் நடத்த திட்டமிடுகிறார்' தருமபுரி எம்பி மீது முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு! - தருமபுரி மாவட்டச் செய்திகள்

தருமபுரி மக்களவை உறுப்பினர் நத்தமேடு கிராமத்தில் தேவையில்லாமல் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தவும், அங்குள்ள மக்கள் மீது பொய் வழக்கு போடவும் திட்டமிட்டு செயல்படுவதாக பாமக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

Dharmapuri mp plan to create riots  says  ex pmk mla velusamy
கலவலரத்தை ஏற்படுத்த தருமபுரி எம்பி திட்டமிடுவதாக பாமக முன்னாள் எம்பி குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 23, 2020, 4:22 PM IST

தருமபுரி: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்ற வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டம், இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டமாகவும் நடைபெற்றது.

தற்போது, மூன்றாம் கட்டமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டமாக நடைபெற்றவருகிறது.

இந்நிலையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட பாமகவினர் தருமபுரி கடத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

Dharmapuri mp plan to create riots  says  ex pmk mla velusamy
மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட பாமகவினர்

அப்போது பேசிய அவர், தயாநிதி மாறன் வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

தருமபுரி மக்களவை உறுப்பினர் தேவையில்லாமல் நத்தமேடு கிராமத்தில் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நத்தமேடு கிராம மக்கள் மீது தருமபுரி எம்பி பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: 'தேர்தல் காலம் என்பதால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடைபெறுகிறது'- இல. கணேசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.