தருமபுரி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் ரயில்வே வாரிய இணையதளத்தில், முன்பதிவில் மாற்றுத்திறனாளி என்பதற்குப் பதிலாக திவ்யங்ஜன் என இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திவ்யங்ஜன் என்பது குறித்த விவரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தெரியாததால் குழப்பம் அடைந்துள்ளதாகவும், திவ்யாங்ஜன் என்று உள்ளதை ஆங்கிலத்தில் 'பர்சன் வித் டிஸ்ஏபில்டி(Person with disability)' என்று மாற்ற வேண்டும் என மக்களவையில் பேசினார்.
இதனையடுத்து, ரயில்வே அமைச்சக உயர் அலுவலர்களுக்கு திவ்யங்ஜன் என இந்தியில் இருப்பதை 'Person with disability' என மாற்ற வேண்டும் என ரயில்வே துறை மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு, கேரளத்தில் மே27 பருவமழை தொடக்கம்!'