தர்மபுரி : மிட்டாரெட்டிஅள்ளி அருகே வனப்பகுதியின் மையப்பகுதியில் 6 கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் குடிநீர், சாலை, மின்சார வசதி கோரி கிராம மக்கள் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிராமத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.
இதையடுத்து, வெங்கடேஷ்வரன் வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலை கிராமத்தை பார்வையிட்டார். இங்குள்ள பொதுமக்கள் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும், அடிப்படைவசதி இல்லாததால் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மலை பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
தற்போது வாழ்ந்து வரும் மக்கள் விவசாயத்திற்கு டிராக்டர் கொண்டுவர வனப்பகுதியிடம் அனுமதி பெற்று தரவேண்டும், சாலை மின்சாரம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பேசிய எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ,”பொதுமக்கள் விவசாய பணிகள் மேற்கொள்ள டிராக்டர் மலைப் பகுதிக்கு கொண்டு செல்ல மாவட்ட வன அலுவலர், வனத்துறை அமைச்சரிடம் பேசி இப்பகுதி மக்கள் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சோலார் மின்விளக்கு, குடிநீர் வசதிக்காக சோலார் மூலம் மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க:
'சமூக நல துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில்' - கீதா ஜீவன்