தருமபுரி: காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு எனத் தனிக்கோயில் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தட்ஷண காசி காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான கோயில் என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று(டிச.15) காலபைரவர் ஜெயந்தியை ஒட்டி, காலை முதல் பைரவருக்கு பல்வேறு யாகங்களும், 64 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பைரவர் ருத்ராட்சி பந்தலில் அமர்ந்துகொண்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பைரவருக்கு 18 குருக்கள்களைக் கொண்டு 1 லட்சத்து 8 இலட்சார்ச்சனை நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையும் படிங்க: டோல்கேட்டுகளில் நடக்கும் அட்டூழியம்.. நாடாளுமன்றத்தில் நியாயம் கேட்ட திமுக எம்.பி.