தர்மபுரி: கா்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்குச் செல்லும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து சுமார் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தின் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று (செப்.04) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று (செப்.05) மூன்றாயிரம் கன அடி நீர் உயர்ந்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதையும் படிங்க : ’நிபா வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்’ - சுகாதார செயலர்