தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் முதலை இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் இணைந்து ஓம் சக்தி கோயில் அருகே இருந்த முதலையை லாபகமாக பிடித்து முதலை மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
பரந்து விரிந்த காவிரி ஆற்றில் தண்ணீர் ஆழமான பகுதிகளாக இருப்பதால் இங்கு முதலைகள் அதிகளவு உள்ளன. நீர்வரத்து காரணமாக தண்ணீரில் முதலைகள் அடித்து வரப்பட்டுள்ளன.
தற்போது ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் முதலை ஒகேனக்கல் பகுதிகளில் கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் ஒகேனக்கல் பகுதிகளில் இரண்டு முதலைகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:
14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!