தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை நீடித்து வருவதால் பொதுமக்கள் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதிக்கு வெளியூரிலிருந்து வரும் நபர்களை காவல்துறை சோதனைச் சாவடி அமைத்து தடுத்து திருப்பி அனுப்பி வருவதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், துணிகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு அருவியில் இருந்த துணிகளை அகற்றி வருகின்றனா்.
இதையும் படிங்க: மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நிபந்தனையுடன் அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்!