தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) காலை தொடங்கியது. சேர்க்கை தொடங்கியதிலிருந்து மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று சேர்ந்து வருகின்றனர். மாணவர் சேர்க்கைக்கு பள்ளி மாணவ - மாணவியர் மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்று நகல், 3 புகைப்படங்கள், மாணவியரின் வங்கிக் கணக்கு, புத்தக நகல் மாணவர் சேர்க்கைக்கு தேவைப்படுகிறது.
மாணவிகள் அதிக அளவு அறிவியல் மற்றும் கணிதப் பிரிவுகளை தேர்வு செய்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற உடனே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளிலும் மாணவ - மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை தொடக்கம் - தர்மபுரி அரசு பள்ளிகள் சேர்க்கை
தருமபுரி: அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவியர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கியது.