தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு மற்றும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திருமண மாலைகள் தயாரிக்க பயன்படும் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.
கரோனா வைரஸ் தடை உத்தரவு காரணமாக பூக்கள் ஏற்றுமதி இல்லாத காரணத்தால் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி பூக்கள் சந்தையில் இருந்து கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். வாகன போக்குவரத்து தடை காரணமாக பூக்கள் ஏற்றுமதி கடந்த 70 நாட்களாக தடைபட்டுள்ளது.
ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படும் சம்பங்கி பூ தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் பூக்களை பறிக்க செலவு செய்யும் பணம் கூட வருவதில்லை எனக் கூறி சாலை ஓரங்களில் வீசி செல்கின்றனர்.
கனகாம்பரம் பூ கிலோ 70 ரூபாய், மல்லி பூ கிலோ 60 ரூபாய், அரலி பூ கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. உள்ளூர் பொதுமக்கள் நடமாட்டம் குறைவு காரணமாகவும் பூக்களின் விலை குறைந்துள்ளது. விலை குறைவு காரணமாக மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 4 லட்சம் மதிப்பிலான போலி கிருமி நாசினி பொருள்கள் பறிமுதல்!