ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கான கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டி! - Dharmapuri fire department corona awreness

தருமபுரி: தீயணைப்பு அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.

dharmapuri தருமபுரி தருமபுரி தீயணைப்பு நிலையம் கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி Dharmapuri fire department corona awreness Fire department corona awarness drawing competition
கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி
author img

By

Published : Jun 1, 2020, 2:59 PM IST

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநர் சைலேந்திரபாபு சுற்றறிக்கையின் படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கான கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 5 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் ஒரு துணை நிலையம் உட்பட மாவட்டத்தில் உள்ள ஆறு இடங்களில் இந்த ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவ - மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் ஊக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டியில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்பட்டு, அங்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜாஸ்மின் பார்வையிட்டார். இந்த ஓவியப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.